-------------------------------------நாகரீகமான வார்தைகளால் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவுகள் இவைகள்!-------------------------

ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?

ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?

அவர் உறங்குவது எப்படி? இறைவன் முருகன் ஆறு முகங்களை பெற்று இருக்கிறார் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஆறு தலைகளுடன் இருக்கும் அவர் எந்தப்பக்கம் தலையை சாய்த்து உறங்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பே!

ஒரு சமயம் கிருபானந்த வாரியார் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும் கல்யாணத்திற்காக போய் இருந்தார்.  அங்கு நடிகர் எம். ஆர். ராதா வந்திருந்தார். அவர் கிருபாணந்த வாரியாரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டார். ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி? என்று

கிருபானந்தவாரியார் உடனே மணமக்களின் பெற்றோர்களை அழைத்தார். அவர்களிடம் கேட்டார். நீங்கள் அனைவரும் நேற்று நன்றாக உறங்கினீர்களா என்று. அவர்கள் சொன்னார்கள். அது எப்படி நன்றாக தூங்க முடியும்! இன்று கல்யாணம் இருக்கையில்! அதனால் நாங்கள் நன்றாக தூங்கவில்லை என்றனர் மணமக்களின் பெற்றோர்கள். பார்த்தீர்களா இந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கைக்காக இவர்கள் தூங்கவில்லையே! அப்படியிருக்கும்போது எம்பெருமான் முருகனுக்கு இந்த உலகில் எத்தனை கோடி குழந்தைகளாகிய மக்கள் இருக்கிறார்கள்? இவ்வளவு பேர் இருக்கும்போது எம்பெருமான் முருகன் எப்படி ஐயா தூங்க முடியும்!

 ----------x------------x---------------

ஒரு கடையில் உங்களுக்கு பிடித்த கணவரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று போர்டு வைத்து இருந்தார்கள்.

அந்த கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது!
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க. அது என்னன்னா???
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு…ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்புடியே வெளிய தான் போக முடியும். இது தான் அந்த கடையின் விதிமுறை!!
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா….”பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன…ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது”
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
“முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்” அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இரண்டாவது தளத்திற்கு மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
“இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் ” அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
“இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். ” அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், “ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ” அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
“இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் ” அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்… நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே… மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
“இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் ” அப்டின்னு.
அவ்ளோ தான்…..அந்த பெண்மணியாள முடியல…[ வடிவேலு ஸ்டைலில்] … சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது… சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
“இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத் தான்###
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ……….
பார்த்து பத்திரமாக கீழே படியில் இறங்கவும் ” அப்டின்னு போட்டிருந்தது..
----x-------x------
சோமு: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு: ?!?!?!?!?!?

பீரோ வைக்கும் திசை, பீரோ வைக்கும் முறை!
ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?

நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம் வர நல்ல வழி!

விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!

நான் கூட இவன ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க!

மர்ம சாமியார்
ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர். குருவை நாடி வந்தார். ‘குருவே இவ்வளவு வசதிகள் இருந்தும் மற்றவர்கள் செய்த துரோகம், நான் சந்தித்த ஏமாற்றங்கள், தோல்விகள் என்று என் மனம் முழுவதும் ரணங்கள். என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்’. குரு அங்கு விளையாடிக்கொண்டிருந்த சேரிக் குழந்தையைக் காட்டி, ‘அதைப்போல் வாழ்’ என்றார். செல்வந்தர் குழம்பினார். ‘எல்லாச் செல்வங்களையும் துறந்து ஏழையாகச் சொல்கிறீர்களா?’ ‘இல்லை மகனே! இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் குழந்தைகள் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அழத் தோன்றினால், ஓவென்று அழும். சிரிக்க நினைத்தால், வாய்விட்டு சிரிக்கும். அச்சம், அழுக்காறு, ஏமாற்றம், வன்மம் என்று எதுவும் குழந்தைகளின் மனதில் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு, தங்கள் இதயங்களில் சுமை இல்லாமல், அடுத்தக்கட்ட சாகசத்துக்குத் தயாராகிவிடுவதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்’ என்றார் குரு.

Read more at : மனம் எப்படி கர்மவினையை உண்டாக்குகிறது?! http://tamilblog.ishafoundation.org/manam-eppadi-karmavinaiyai-undakkugirathu/