-------------------------------------நாகரீகமான வார்தைகளால் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவுகள் இவைகள்!-------------------------

கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!

கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!!
அதீத ஆர்வமோ. அல்லது எல்லாம் எனக்குள் என்னும் கெட்ட குணமோ... பலர் தவறான தகவல்களைப் பதிவு செய்து விடுகின்றனர்.
அதனைப் பயன்படுத்தும் எத்தனை பேர்களை காயப்படுத்திவிடுகிறது?

உதாரணத்திற்கு சில  கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!!
மண்ணுக்கு மரம் பாரமா... எழுதியது பி.கே. முத்துசாமி..இணையத்தில் ஐந்து கவிஞர்கள் பெயரில் இருக்கிறது.குற்றம் புரிந்தவன்... கு.சா.கிருஸ்ணமூர்த்தி எழுதியது...வேறொருவர் பெயரில் இருக்கிறது. வாழ்நாள் முழுதும் சாதியத்திற்குப் போராடும்  பொன்னீலன் பற்றிய குறிப்பில் நாடார் சாதியில் பிறந்தவர் என இருக்கிறது. எவன் கேட்டது? யார் போட்டது?
கண்ணுக்கு முன் நமக்குத்தெரிந்த சிலவே இப்படி மாறியிருக்கும் போது தெரியாத எத்தனை மாறியிருக்கலாம்? கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!!
தேவையான தகவல்களுக்கு கூகுளை பயன்படுத்தலாம்...ஆனால் அதுவே உண்மையும் இறுதியும் என உறுதியாக நம்பிவிடக்கூடாது.
அய்யன் வளளுவர் எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்று சொன்ன குறள் கீழே உள்ளது கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!!

எச்சொல் யார்யார் வாய் கேட்பினும் அச்சொல்
மெய்பொருள் காண்பது அறிவு

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

மேலே உள்ள குறளில் எது உண்மையான திருக்குறள். இரண்டுமே கூகுளில் வருகிறதே. போதாக்குறைக்கு இந்த இரண்டு குறள்களுக்கும் விளக்கமும் வருகிறது. கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!!

சிரிக்க கொஞ்சம்:-
 
மகன் அப்பாகிட்டே எக்ஸாம் மார்க் சீட்டை காட்டினான் அதில் நூற்றுக்கு இருபது என்று இருந்தது அதற்க்கு அப்பா கோபப்பட்டு நீ! எண் மகேன இல்லை! என்று விரக்தியா கூறினார். ஐயோ! அப்பா இது DNA டெஸ்ட் இல்லை! இது எக்ஸாம் மார்க் சீட்.
ஹா ! ஹா !ஹா !!  கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!



சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா, தன் சோகத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைத்த 'ஒப்பாரி' (நகைச்சுவை) பாடல் இது.


துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............

மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!
சொகங்கெட்டுப் போனேனே......

கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......

மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!
எடங்குடுக்கப் பாக்குறீக....!

கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!

உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?

பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்! கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!

தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!

முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள  கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!

பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
- கிரிஜா மணாளன்  கூகுள் ஆண்டவர் குப்பை மேடாகிறார்!